இலங்கையில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டொன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நியூஸிலாந்தின் கிரைச்சேர்ஜ் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இனினும் இலங்கைத் தாக்குதல் தொடர்பில் தமது நாட்டு புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைக்கவில்லை என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்தின் க்ரைஸ்ச்சர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேற்று நாடாளுமனறில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நியூஸிலாந்து பிரதமர் குறித்த விடயத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், இலங்கையின் விசாரணைகள் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பதை தான் புரிந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக, அது குறித்து இந்திய புலனாய்வு துறையினர், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவும், இந்தியத் தரப்பினரால், ஒரு முன் எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டிருந்தது என இலங்கை தரப்பு தகவலொன்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க