அழகு / ஆரோக்கியம்

உடலில் கொழுப்பு இருப்பது நன்மையா ? தீமையா ?

உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இரத்தத்தில் கொழுப்பு அவசியம். கல்லீரல் 80% மான கொழுப்பை உற்பத்தி செய்கிறது. எஞ்சியவை இறைச்சி, மீன், முட்டை, பால்  போன்ற உணவுப் பொருட்களில் இருந்து உற்பத்தி ஆகின்றது. கல்லீரல்  இரத்த ஓட்டத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்துகின்றது.

ஒலிவ் எண்ணெயில் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு அடங்கியுள்ளது.  இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவும்.

முழுத் தானியங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். தானியங்களில்  அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

பாதாம், நிலக்கடலை போன்றவற்றில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளதால் இதுவும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை உடலுக்கு தீமையை விளைவிக்கும். பல நோய்களை உருவாக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது மிகவும் அவசியம்.

கருத்து தெரிவிக்க