உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘மக்களுக்காக உயிரை கொடுக்கவும் தயார்’ – சஜித்!( live updates)

சஜித் பிரேமதாசவின் உரை……

*நவம்பர் மாதம் வரவேண்டிய இடத்துக்கு கட்டாயம் வருவேன்.

* நான் எதற்கும் அஞ்சமாட்டேன். நாட்டு மக்களுக்காக உரியையும் துறக்க தயார்.

*நாட்டுக்கு பாதகமான எந்தவொரு சர்வதேச உடன்படிக்கையிலும் கைச்சாத்திடமாட்டோம்.  பொருளாதரம், பாதுகாப்பு உட்பட  அனைத்து ஒப்பந்தங்களுக்கும் இந்த கோட்பாடு பொருந்தும்.

* தோட்டத் தொழிலாளர்கள் சொற்பளவு வருமானத்துடனேயே வாழ்கின்றனர்.

அவர்களின் வாழ்வில் வறுமை தாண்டவமாடினாலும், தனியார் கம்பனிகள் அதிக இலாபம் பெறுகின்றன.

எனவே, தோட்டத் தொழிலாளர்களை நாம் அரவணைப்போம்- பாதுகாப்போம்.

*தேசிய பாதுகாப்பு என்பது இராணுவ பாதுகாப்பு மட்டும் கிடையாது. பொருளாதாரம், சமுகம் உள்ளிட்ட விடயங்களும் அதில் உள்ளடங்கும். எனவே, தேசிய பாதுகாப்புமீது ஒட்டுமொத்த பார்வையையும் செலுத்த வேண்டும்.

*நவீன யுகத்துக்கேற்ப, இளைஞர்களுக்கு முன்னுரிமையளித்து – நிலையான திட்டங்களுடன், தூரநோக்கி சிந்தனை அடிப்படையில் முன்னிநோக்கி பயணிப்பதே சிறப்பாக  அமையும்.

*நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தி மக்களுக்கு வளமானதொரு எதிர்காலத்தை வழங்குவதே எமது முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும்.

*24 மணிநேரமும் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வகையில் அரசாங்க பொறிமுறை மாற்றியமைக்கப்படும்.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் உரை….

*நாட்டில் அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழ வேண்டுமெனில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சி தொடரவேண்டும்.

*இலங்கைக்கு மீண்டும் இராணுவ ஆட்சி, வெள்ளை வேன் கலாசாரம் தேவையில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஓரணியில் திரள்வோம்.

*கூட்டு எதிரணியில் ராஜபக்சக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குடும்ப ஆட்சியை மீண்டும் நிலைநாட்டுவதே அவர்களின் இலக்கு.

*2015 இல் ஆட்சியைக் கைப்பற்றியதுபோல் இம்முறையும் அதிரடி காட்டுவோம்.

ஹரின் பெர்ணான்டோவின் உரை……

*அரசியலில் அனுபவம் வாய்ந்த சஜித்தையே நாம் ஜனாதிபதி வேட்பாளராக  களமிறக்குவோம். ஜனாதிபதியான பின்னர் இன்னும் 30 வருடங்களுக்கு அவரால் நாட்டுக்காக உழைக்ககூடியதாக இருக்கும்.

*எனது உயிரை பணயம் வைத்தேனும் சஜித்தை ஜனாதிபதியாக்குவேன்.

* பதுளையில் ஆரம்பிக்கும் எதுவும் தோல்வியில் முடிவதில்லை. எனவே, சஜித்தை ஜனாதிபதியாக்கும்வரை எமது போராட்டம் ஓயாது.

கருத்து தெரிவிக்க