வடக்கில் கைத்தொழில் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
50 சமுர்த்தி சங்கங்களுக்கு சொந்தமான எண்ணெய் ஆலைகள், கருவாடு உற்பத்தி மற்றும் பழச்சாறு தயாரிக்கும் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கென 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் மீன்பிடி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை பெற்றுக்கொடுக்கும் மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதனை விரைவில் அங்குரார்ப்பணம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க