உள்நாட்டு செய்திகள்கட்டுரைகள்சமீபத்திய செய்திகள்மலையகச் செய்திகள்

‘தூர்நோக்கோடு சிந்திக்காதவரை மலையகத்துக்கு விடிவில்லை’

மலையகத்தில் அடுத்தடுத்த தாக நிகழ்ந்து வரும் தீ பிடிப்பு சம்பவங்கள் எதனை
எடுத்துக்காட்டுகின்றன.

உண்மையிலேயே இவை விபத்துதானா அல்லது எதனையாவது நோக்கிய ஒரு
பின்னலா என எண்ணக்கூடிய வகையில் இச்சம்பவங்கள் நிகழ்கின்றமை ஒரு நெருடலை
தோற்றுவிக்கின்றது.

கடந்த மாதங்களில் தொடராக மலையகத்தில் சில பகுதிகளில் தோட்ட வரிக்குடில்கள் தீபற்றி
சொத்துகளுக்கும் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டன.

இத்தீபிடித்தலின் பின்னால் அரசியல் கைநகர்வுகள் இருந்ததாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டிய நிலையில் கடந்த வாரமும் தீபிடித்தல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நுவரெலியா- டயகம சந்திரிகாமத்தில் 12 குடும்பங்கள் தாம் வாழ்ந்த குடியிருப்புகளை
தீயிற்கு காவு கொடுத்து விட்டு சந்திரிகாமம் பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பாவம் வீட்டுக்குள் இருந்த அவர்களின் மொத்த உடமைகளையும் இழந்துள்ளனர்.இதில்
வருத்தப்படக்கூடிய விடயம் யாதெனில் வீடுகள் பற்றி முழுவதுமாக தீ பரவியபோதுதான்
பக்கத்து குடியிருப்புகள் எல்லாமே எரிகின்றது என்பது புரிந்திருக்கின்றது.

தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும் அண்மைக்காலமாக மலையகத்தில் அடிக்கடி இவ்வாறான அவலங்கள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்ற நிலையில் . அனைத்து விடயங்களிலும் இரண்டு காரணங்கள் ஊடறுத்து நிற்கின்றன.

1.மின்னொழுக்கு. 2. அதிகளவான விறகு சேமிப்பு.

இச்சம்பவத்தின் தீவிரத்தை அறிந்துக்கொள்வதற்காக நாம் சென்று பார்வையிட்ட வேளையில்
கூட இரண்டு தாய் மார்கள் எனது உனது என்று விறகுக்காக வாக்குவாதப்பட்டுக்கொண்டதை
காணக்கூடியதாக இருந்தது.

அட்டல் என்று சொல்லப்படுகின்ற வீட்டு பரணில் நாள்பட்ட விறகுகளை சேமித்து
வைத்துக்கொள்வதில் நம்மவர்கள் அதிகளவில் கரிசணை காட்டுவது இக்காலத்தில் ஏற்புடையது அல்ல.

தரமற்ற, பாதுகாப்பற்ற மின் இணைப்புகளினால் எழுகின்ற சிறுபொறிகூட
இவ்விறகுகளினால் பெருந்தீயாக மாறிவிடுகின்றது.

இங்கே கூட அட்டலினூடாக தீ பற்றி முழு வீடுகளுக்கும் தீபரவும் வரை யாரும் சரியாக
அறிந்திருக்கவில்லையாம்.

இத்தகைய சம்பவங்கள் தனி வீட்டு திட்டங்களின் விரைவுகளை அவசியப்படுத்துவதோடு வரிகுடில்கள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் வழுபடுத்துகின்றது.

சம்பந்தப்பட்டவர்கள் தேவைகளை உணர்ந்து செயற்படும் போது எமது சமூகம் விரைந்து எழும் ‘’மலையக சமூகத்துக்கு தலைவர்கள் தேவையில்லை.பாதுகாவலர்களே தேவை’’

 

கருத்து தெரிவிக்க