பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டகொட நேற்று கிழக்கு பிராந்திய படைத்தலைமையகத்துக்கு விஜயம் செய்தார்.
அவருடன் இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவும் சென்றிருந்தார்.
இதன்போது படையதிகாரிகள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது.
இதில் கிழக்கு பிராந்தியத்தின் தரை,கடல், வான் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இராணுவத்தளபதியும் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
கருத்து தெரிவிக்க