மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்று வரும் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 201 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி ஏ அணி 194 ஓட்டங்களையும் எடுத்தன.
8 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ஏ அணி 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்த தடுமாரிய நிலையில் சுப்மான் கில், ஹனுமா விகாரி கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது.
19 வயதான சுப்மான் கில் 247 பந்துகளில், இரண்டு 6 ஓட்டங்கள், 19 நான்கு ஓட்டங்களுடன் இரட்டை சதம் பெற்றார்.
ஹனுமான் விகாரி 185 பந்துகளில், ஒரு 6 ஓட்டம்;, 9 நான்கு ஓட்டங்களுடன் சதம் அடித்தார்.
இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 315 ஓட்டங்களை எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் பெற்றதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் குறைந்த வயதில் இரட்டை சதம் பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சுப்மான் கில்.
இதற்கு முன்னர் கடந்த 2002-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 வயதில் கவுதம் காம்பீர் 218 ஒட்டங்களை பெற்றமையே சாதனையாக இருந்தது.
கருத்து தெரிவிக்க