ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை குமார வெல்கம நிராகரித்துள்ளார் என அரசியல் தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.
பொதுஜன பெரமுனவின் கன்னி மாநாடு நாளை (11) மாலை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிருப்தி நிலையிலுள்ள உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தினேஷ் குணவர்தன உட்பட கூட்டு எதிரணியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், மாநாட்டில் பங்கேற்குமாறு அழைத்துள்ளனர். எனினும், தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என குமார வெல்கம திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை சர்வாதிகாரி என்றும், இலங்கைக்கு இராணுவ ஆட்சி தேவையில்லை என்றும் குமார வெல்கம அறிவித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க