சினிமா

அக்‌ஷய் குமாரின் “மிஷன் மங்கல்”

அக்‌ஷய் குமாரின் நடிப்பில் வெளியாகவிருக்கும் “மிஷன் மங்கல்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து உண்மை சம்பவங்கள் சார்ந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து முதன்முதலில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கைகோள் பற்றிய உண்மையை தழுவிய மற்றுமொரு கதையில் நடிக்கிறார் அக்‌ஷய் குமார். விஞ்ஞானி ராகேஷ் தவான் கதாப்பாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், தாரா ஷிண்டேவாக வித்யா பாலனும் நடித்திருக்கிறார்கள். மேலும் டாப்ஸி, நித்யா மேனன், சோனாக்‌ஷி சின்ஹா போன்ற பிரபல கதாநாயகிகளும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜெகன் சக்தி இயக்கியிருக்கும் இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் தயாரித்துள்ளது. இந்த படம் ஆகஸ்டு 15 “சுதந்திர தினம்” அன்று வெளியாகவுள்ளது.

 

கருத்து தெரிவிக்க