கம்பொடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்றைய தினம் கம்போடிய அரச மாளிகையில் அமோக வரவேற்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.
இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய விசேட வரவேற்பு நிகழ்வாக இது அமைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் கம்பொடிய மன்னருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் சமூத்தித்த சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் கம்பொடியாவுக்கும் இடையில் 1952 ம் ஆண்டு முதல் காணப்படும் ராஜதந்திர உறவுகள் குறித்து இங்கு நினைவுபடுத்தப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த காலமே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் உச்சகட்டமென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு மற்றும் பௌத்த மதம் உள்ளிட்ட விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் சமூத்தித்த சமரவிக்கிரம மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க