அழகு / ஆரோக்கியம்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !

நம் அன்றாட உணவுப் பழக்கங்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக் கூடியவையாகவே  இருக்க வேண்டும். சில உணவுகளை  தினமும் எமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை தரும்.

தயிரில் நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்தும் தன்மை அதிகளவில்  உள்ளது. எனவே தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளைப்பூடு கொழுப்பைக் குறைக்கவல்லது. மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது.

நோய் எதிர்ப்புச் சக்திக்கு நின்றபின் ஈ மிகவும் அவசியம். பாதாம் பருப்பில் நின்றபின் ஈ அதிகளவில் உள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வரலாம்.

மஞ்சள் பண்டைய காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்த முக்கிய பொருள். இதனை உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அத்துடன் காயங்களுக்கும் சிறந்த மருந்தாகும்.

 

கருத்து தெரிவிக்க