உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அகில உலக கம்பன் கழக மாநாடு விழா – இராதாகிருஷ்ணனுக்கு அழைப்பு!

கம்பனுக்கு உலக அளவில் மாநாடு நடத்த அகில உலக கம்பன் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கை வாழ் மக்கள் கலந்துகொண்டு மகாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அகில உலக கம்பன் கழகத்தின் தலைவர் சுவாமி தா.சரஹண பவானந்தா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இவர் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள அகில உலக கம்பன் கழக விழாவிற்கு சிறப்பு அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அழைப்பை இலங்கைக்கு வருகை தந்துள்ள அகில உலக கம்பன் கழகத்தின் தலைவர் நேற்று (06.08.2019) கையளித்துள்ளார்.

2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கருத்தரங்கம் கவியரங்கம் பட்டிமன்றம் தனியுறைர நாட்டிய அரங்கம் சிறப்பாக செயல்படும் கம்பன் கழகங்களுக்கு விருது வழங்குதல் சிறந்த கம்பன் பனி  செய்பவருக்கு விருது வழங்குதல் புத்தகம் வெளியீடு மாநாட்டு மலர் வெளியீடு உள்ளிட்ட பல இலக்கிய வைபவங்கள் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டிற்கு கம்பராமாயணம் பற்றிய ஆய்வு கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வரவேற்கப்படுகின்றன.

மூன்று பக்க அளவில் கட்டுரைகள் தயாரித்து கட்டுரையாளர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் சுய சுயவிபரக் குறிப்புகளுடன்  internationalkamban@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

தேர்வுக் குழு தேர்வு செய்த பிறகு இந்த கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்படும்.

பின்னர் ஜெர்மன் பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்த்து புத்தகங்கள் வெளியிடப்படும்.

எனவே இலங்கை வாழ் மக்கள் இந்த அகில உலக கம்பன் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அகில உலக கம்பன் கழகத்தின் சார்பாக வேண்டுகோள் ஒன்றை விடுகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

கருத்து தெரிவிக்க