உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

73 காவல்துறை அதிகாரிகள் இடம் மாற்றம்

தேசிய காவல்துறை ஆணையத்தின் அனுமதியுடன் 73 காவல்துறை அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சிகர்கள் 4 பேரும், காவற்துறை அதிகாரிகள் 33 பேரும், உதவி காவற்துறை அதிகாரிகள் 24 பேரும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக பிரதான காவற்துறை பரிசோதகர்கள் 13 பேரும், காவற்துறை பரிசோதகர்கள் 9 பேரும் இடமாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் எஸ்.பி. ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

கருத்து தெரிவிக்க