” பஸில் ராஜபக்சவை நாம் ‘அரசியல் மிருகமாகவே’ பார்க்கின்றோம். எந்தகட்டத்திலும் ஒருங்கமைப்புமூலம் கட்சியை கட்டியெழுப்பகூடியவர். மஹிந்த ஜனாதிபதியாவதற்குகூட இவரே பிரதான காரணம்.”
இவ்வாறு பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
” எனது தந்தையான காமினி திஸாநாயக்கவுடன் பஸில் ராஜபக்ச நெருங்கி பழகினார். பஸிலுக்கு முக்கிய பதவிகளையும் வழங்கினார். எனது தந்தையிடமிருந்து அவர் நிறைய அரசியல் நுட்பங்களை கற்றறிந்தார்.
நெருக்கடியான சூழ்நிலைகளில் கட்சியை கட்டியெழுப்புதல், அனைத்து தரப்புகளையும் இணைத்தல் உள்ளிட்ட விடயங்களில் எனது தந்தை தேர்ச்சிபெற்றவர். தற்போது பஸில் அதே பாணியில் செயற்பட்டுவருகிறார்.
மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கும் பெரும்பாடுபட்டார். அதுமட்டுமல்ல குறுகிய காலப்பகுதிக்குள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பினார். எனவே, ராஜபக்ச குடும்பத்திலுள்ள சிறந்த அரசியல்வாதி அவர்தான்.” என்றும் நவீன் கூறினார்.
கருத்து தெரிவிக்க