புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் 1988 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரணதரம் கல்வி பயின்று புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் புதுக்குடியிருப்பு ஆதாரவைத்தியசாலையில் சிறுவர் பூங்கா சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த சிறுவர் பூங்கா, நேற்று 01/08/2019 முல்லைமாவட்ட பிராந்தியசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி உமாசங்கர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிகளவான சனத்தொகை கொண்ட பிரதேச செயலகமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் காணப் படுகின்றது.
அந்த வகையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்திய சாலையில் நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த வகையில் அங்கு வருகின்ற சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கோடும் வைத்தியசாலை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கோடும் குறித்த சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த சிறுவர் பூங்காவே நேற்றைய வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கல்விமான்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க