வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் இங்கிருந்து நீர்கொழும்பிற்கு திரும்பிகொண்டு இருப்பதாக புனர்வாழ்வு நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா நலன்புரி நிலையத்தில் நீர்கொழும்பு பகுதியில் கடந்த 21.04 கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் காரணமாக தங்கவைக்கப்பட்டிருந்த 113பேர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இதில் அண்மையில் வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமிற்கு 20பேர் தமது சுயவிருப்பின் காரணமாக சென்றுள்ளனர்.
அதன் பின்னர் 15பேர் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்து நீர்கொழும்பிற்கு தமது சுயவிருப்பில் செல்ல விரும்பம் தெரிவித்துள்ள நிலையில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கடந்த தினங்களில் அறுவர் சென்றுள்ளனர்.
மேலும் 9பேர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களில் நால்வர் நேற்றைய தினம் சென்றுள்ள போதிலும் மேலும் ஐவருக்கான அனுமதி என்னும் கிடைக்கவில்லையெனவும் தற்போது 81பேர் குறித்த முகாமில் இருப்பதாகவும் புனர்வாழ்வு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் குறித்த அகதிகளை தங்கவைப்பதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புக்கள் வெளிவந்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க