சினிமா

மீண்டும் மலையாளத்தில் கதாநாயகியாகும் கீர்த்தி சுரேஷ்

2018-ம் ஆண்டு அதிக படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். தளபதியுடன் நடித்த சர்க்காருக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த வேறு படங்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும் மலையாளத்தில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட மோகன்லாலின் மரைக்கார் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நாகர்ஜூனா நடித்துள்ள மன்மதடு 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தலை காட்டியுள்ளார்.

இந்தநிலையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் கதாநாயகனாக மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்க இருப்பதாகவும் பிரபல இளம் இயக்குனர் வினித் சீனிவாசன் இந்தப் படத்தை இயக்குகிறார் எனவும் இவர்கள் மூவருமே நட்சத்திர வாரிசுகள் என்பதும், சிறுவயது நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க