நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
13 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) முதல் அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதிருக்கத் தீர்மானித்துள்ளனர்.
சம்பள முரண்பாடுகளை நீக்குதல், கிராம உத்தியோகத்தர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு கிராம சேவை உத்தியோகத்தர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இந்த விடயம் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் ரத்னாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க