- ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது.
- தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும்.
- அறிஞன் விழிப்படைந்து தன் வாழ்வில் கருத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து, வெள்ளத்தால் சேதம் அடையாத ஒரு தீவைப்போல தன்னைப் பலப்படுத்திக்கொள்கிறான்.
- உண்மையான பேச்சை உரைப்பவன் முரட்டுத்தனமில்லாமல் அறிவுத் தெளிவுடன் இனிமையாகப் பேசுபவன் எவனோ எவர் மனமும் புண்படாமல் பேசுபவன் எவனோ அவனே சரியான மனிதன்.
கருத்து தெரிவிக்க