உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி பிரதேச சபைக்குச் சொந்தமான குழாய் கிணற்றில் இருந்து நாளாந்தம் பல இலட்சம் லீற்றர் நீர் இராணுவத்தினரால் எடுத்து செல்லப்படுகின்றது.

இதனால் அயலில் உள்ள அனைத்துக் கிணறுகளிலும் நீர் மாசடைவது மற்றும் குடிநீரில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்

இது தொடர்பாக பிரதேச சபையால் உரிய கடிதங்கள் இராணுவத் தரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த இடத்தின் நிலவரங்கள் ஆராய 2.10. 2018 அன்று சென்ற இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக தெரிய வந்தது.

இதன் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டதாக தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் மீது முல்லைத்தீவு முள்ளியவளைகாவல்துறை திட்டமிட்ட வகையில் வழக்கை பதிவு செய்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அடிப்படையில் இன்று (31)காலை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இது மக்களின் பிரச்சினை என சட்டத்தரணிகள் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து நீதிபதி குறித்த வழக்கினை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க