உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி!

யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.

விமானத்தின் ஓடு பாதை 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் முதலாவது விமானம் இங்கிருந்து ஆரம்பமாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

சென்னைக்கிடையிலான விமான சேவைகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் ஓடு பாதை அபிவிருத்திக்காக இரண்டு பில்லயன் ரூபா செலவிடப்படுகிறது.

தற்காலிக விமான கட்டுபாட்டு கோபுரம் மற்றும் திருப்பு முனை அமைக்கப்படவுள்ளது.

3800 மீற்றர் நீளமான ஓடு பாதையில் யு320 ரக விமானங்கள் தரையிறங்க கூடியதாக அமைக்கப்படவுள்ளது.

இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெல்லிப்பளையில் இருந்து பலாலி விமான நிலையம் வரையிலான வீதியை அமைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க