அழகு / ஆரோக்கியம்

உறங்கும் முன்னர் செய்யக் கூடாதவைகள் !

இரவு உறக்கத்தின் போது தான் மூளை ஒவ்வொரு நாளும் சேகரித்த நச்சுகள், கழிவுகளை அகற்றுகின்றது. இதனால் காலையில் எழும்பும் போது புத்துணர்வுடன் இருக்கின்றோம்.காலையில் கிடைக்கும் புதிய ஒட்சிசன் மூலம் உடல் உறுப்புகள் தத்தம்  வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய ஆரம்பிக்கின்றன.

எனவே தான் உறக்கம் நமது அன்றாட வேலைகளை செய்ய மிகவும் அவசியம்.

உறங்கும் போது வெளிச்சம் இல்லாமல் இருக்க வேண்டும். யன்னல் வெளிச்சம் மட்டும் போதுமானது.

உறங்குவதற்கு முன் பயங்கரமான திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்கவும். இவை உறக்கத்தை கலைத்து விடும். இனிமையான இசையை கேட்பது நல்லது.

உறங்க செல்வதற்கு முன்னர் கோப்பி குடிப்பதை தவிர்க்க வேண்டும். கோப்பி உறக்கத்தை தடுத்து விடும்.

இரவில் 10.30 மணிக்குள் உறங்கி விட வேண்டும். ஆகவே நிம்மதியான உறக்கத்திற்கு இவற்றை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

கருத்து தெரிவிக்க