காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றய தினம் காலை முன்னெடுக்கபட்டிருந்தது.
“சர்வதேசமே எமக்கு நீதி விசாரணை வேண்டும் நிலையான தீர்வு வேண்டும் என்ற பலமான கோரிக்கையின் அடிப்படையில்” குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்…
பல வருடங்கள் கடந்தும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு வராதநிலையில் நீதிக்கான போராட்டத்தில் தொடர்ந்தும் நாம் ஈடுபட்டுள்ளோம்.
முல்லைத்தீவில் மரணடைந்த திரேசம்மா என்ற எமது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருடன் இதுவரை 38 பேர் இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மரணித்துள்ளனர்.
38 பேர் இறந்த நிலையில் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலர் உடல் தளர்வுற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் தான் நாம் நீதியை கோரி நிற்கின்றோம்.
வவுனியாவில் மொத்தமாக 420 பேர் காணாமல் ஆக்கபட்டுள்ளனர் எனவே அவர்கள் காணாமல் ஆக்கபட்ட காலங்களில் பணியாற்றிய தளபதிகளிடம் விசாரணை நடாத்தினால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
கடத்தபட்டு காணாமல்ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்தநிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிகொண்டிருக்கும் அவல நிலையில் தீர்வை வழங்கவேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள்.
எனவே இந்தவிடயங்களை ஊடகங்கள் வாயிலாக சர்வதேச சமூகத்திற்கு கூறமுனைகின்றோம் என்று தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் படைவீரர் எழுவரையும் தண்டிக்காத அரசு எமக்கு நீதிவழங்குமா,கையிலே ஒப்படைத்தவரை திரும்பிதருவதற்கு எதற்கு ஓம்எம் பி?, கடத்தியவர்களை நீதியின் முன்நிறுத்து, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
கருத்து தெரிவிக்க