முகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நமது உதடுகளையும் முகம் போலவே அழகாக வைத்திருக்க வேண்டும். அதற்கான சில வழிகள்.
பீற்றூட் அல்லது மாதுளம் பழச்சாற்றை உதட்டில் பூசி வந்தால் சிவப்பாக மாறும்.
தினமும் இரவில் படுக்கும் முன் கொத்தமல்லி இலைச் சாற்றை உதட்டில் பூசினாலும் உதடுகள் அழகாக இருக்கும்.
கொழுப்பு சத்து குறைவதாலும் உதடுகள் காய்ந்து சுருங்கி வயதான தோற்றத்தை காட்டும். இதற்கு ஒவ்வொரு நாளும் உதட்டில் வசலின் ஜெல் பூசி வர வேண்டும். அத்துடன் ஊட்டச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
உதடுகளின் மேல் நெய் அல்லது வெண்ணெய் பூசினாலும் உதடுகள் காயாமல் இருப்பதோடு அழகாக இருக்கும்.
பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு இரண்டு துளிகள் விட்டு கலந்து உதட்டில் பூசி வர கருமை மறைந்து சிவப்பாக மாறும்.
கருத்து தெரிவிக்க