உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்து.

குறித்த கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இணை தலைவர்களான பிரதி அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், சி.சிறிதரன் ஆகியோரின் இணை தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது மாவை.சேனாதிராஜா, அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களம்சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், மற்றும் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது,

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் 5G தொழில்நுட்ப கோபுரங்கள் அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன் போது மாவட்டத்தில் உள்ள வரட்சியான நிலை தொடர்பிலும், பாதிப்புக்கள் தொடர்பிலும் அரசாங்க அதிபரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன

கிளிநொச்சி மாவட்டத்தில் அரசினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் முழுமை பெறாத திட்டங்கள் தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பேருந்து நிலையம், விளையாட்டு மைதானம், பூநகரி குளம், மாவட்ட கலாச்சார மண்டபம், பொதுநூலகம், a9 சமாந்தர வீதி, பூநகரிக்கான குடிநீர் ஆகியன இவ்வாறு முழுமை பெறாத திட்டங்களாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கிளிநொச்சி கௌதாரி முனை பிரதேசத்தில் சட்டத்திற்கு மாறாக மேற்கொள்ளப்பட்டுவரும் மண்ணகழ்வு தொடர்பில் பேசப்பட்டது.

படையினர் மற்றம் சிவில் பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வட்டக்கச்சி விவசாய பண்ணை மற்றும் விவசாச பாடசாலை காணியை படையினர் விடுவிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இவை உள்ளடங்கலாக மேலும் பல்வேறு காரணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

கருத்து தெரிவிக்க