உள்நாட்டு செய்திகள்

‘ஜனாதிபதியை ரணில் ஏமாற்றியுள்ளார்’: மஹிந்த

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மொட்டு அணியின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர் கூட்டம் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்றது. உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இரண்டு தடவை ஜனாதிபதி பதவி வகித்தவர் மீண்டும் போட்டியிட கூடாது என்ற சீர்திருத்தம் தனக்கும், இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடமுடியாது என்று கோத்தபய ஷ, பஸில் ராஜபக்ஷவிற்கு எதிராகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயது 35 ஆக அதிகரித்தமை நாமல் ராஜபக்ஷ விற்குமாகும்.

நாட்டு மக்களுக்காகவன்றி எம்மை மையப்படுத்தியே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மிக சூட்சமமான முறையில் குறைக்கப்பட்டுள்ளது.

இதுவே இன்றைய அரசியல் அதிகார பிரச்சினைக்கு பிரதான காரணம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றியுள்ளார். இதனை அதனை அவர் ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

கருத்து தெரிவிக்க