” யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள், வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்துள்ளார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
இது வெறும் விவாதமாக இருக்குமே தவிர இதனால் ஆகப் போகின்ற பயன் எதுவும் கிடையாது என்பது இந்த விவாதத்தைக் கொண்டு வந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
எனினும், அவர்களுக்கு வாக்களித்த எமது மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கும், அடுத்த தேர்தலின்போது வெறுங் கையுடன் வீடு வீடாகப் போனால் எதுவும் நடக்காது என்பதால், இந்த விவாதத்தையாவது எடுத்துக் கொண்டு போவோம் என நினைத்திருப்பதாலும், இந்த இரண்டு நாட்கள் அவர்களது கடைசி நேரப் பிழைப்பாகவே இருக்கின்றது.
எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாறக் கூடிய நிலையில் இல்லை. எமது மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தத் தரப்பினர் அடிக்கடி மறந்துவிடுவதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது.
‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?” என்றொரு பழமொழி இருக்கின்றது. இந்தப் பழமொழி இவர்களது செயற்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை தமிழ் மக்களது ஏனைய எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க மாட்டோம் என்றவர்கள், எமது மக்களுக்கு அன்றாட, அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளோ, அபிவிருத்தி தேவையில்லை, அரசியல் தீர்வே தேவை என்றவர்கள், அதற்காகவே இந்த அரசாங்கத்தைத் தாங்கள் கொண்டு வந்ததாகக் கூறினார்கள்.
தேசியப் பிரச்சினைக்கு இப்போதைக்குத் தீர்வு சாத்தியமில்லை எனத் தெரிந்து கொண்டுதான் இந்தத் தமிழ்த் தரப்பினர் எமது மக்களை இதுவரையில் ஏமாற்றி வந்துள்ளனர் என்பது தெட்டத் தெளிவாகின்றது. எனவேதான், இந்தத் தமிழத் தரப்பினர் தீபாவளிக்குத் தீபாவளி ஏதோ தீபாவளிப் பட்டாசு போல், அரசியல் தீர்வு அடுத்த தீபாவளிக்கு வரும் – அடுத்த தீபாவளிக்கு வரும் எனக் கூறிக்கொண்டு வந்துள்ளனர் என்றே தெரிய வருகின்றது.
யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள், வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை என்று எமது மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது. இந்தக் கூற்றினை வலுப்படுத்தும் வகையிலேயே இன்று இந்த விவாதத்தைக் கொண்டு வந்துள்ள தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்கின்றன.
தில் ஒரு அங்கமாகவே – அநேகமாகக் கடைசி அங்கமாகவே – இன்றைய இந்த விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது .” என்றார்.
கருத்து தெரிவிக்க