சினிமா

சூர்யாவுக்காக குரல் கொடுக்கும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம்!

விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்ற செந்தில் திரையுலகில் பல படங்களில் பாடல்கள் பாடி வருகிறார்.
இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் ஒரு படத்தில் பாடல் ஒன்றை அவர் பாடி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா மற்றும் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி உட்பட ஜாக்கி ஷெராப்,பரேஷ் ராவல், கருணாஸ், மோகன் பாபு என  பலர் நடித்துள்ள நடித்து வரும் ‘சூரரைப் போற்று’ என்ற படத்தின் தொடக்க  பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடலை ஏகாதேசி என்ற பாடலாசிரியர் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

கருத்து தெரிவிக்க