தான் பங்கேற்கும் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் இன்று துடுப்பெடுத்தாடிய லசித் மாலிங்க ஆட்டமிழக்காமல் ஆறு ஓட்டங்களைக் குவித்தார்.
பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மாலிங்க துடுப்பெடுத்தாட களமிறங்கியபோது இரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்டங்களைக் குவித்தது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசல் பெரேரா சதம் அடித்தார்.
வங்கதேசத்து அணிக்கு வெற்றி இலக்காக 315 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க