மொட்டு அணியுடன் 10 அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஹேமகுமார நாணயக்கார – மௌபிம ஜனதா கட்சி, சதாசிவம் – இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, கமல் நிசங்க – லிபரல் கட்சி, சரத் மனமேந்திர – புதிய சிஹல உறுமய, அருண டி சொய்சா – ஜனநாயக தேசிய அமைப்பு, விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) – தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, சரத் விஜேரத்ன – பூமிபுத்திர கட்சி, ஜயந்த குலதுங்க – எக்சத் லங்கா மகா சபை, எஸ் ஜே. துஷ்யந்தன் – ஈழவர் ஜனநாயக முன்னணி, முபாரக் அப்துல் மஜிஸ் – முஸ்லிம் உலமா ஆகிய கட்சிகளே இவ்வாறு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
மொட்டு அணி, அரசியல் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று
ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத 10 அரசியல் கட்சிகள் இன்று (ஜூலை 26) கூட்டணி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
இன்று காலை 9 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறுவதாக என்று பெரமுன தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூட்டணி அமைப்பது தொடர்பாக இதுவரை பெரமுன, 26 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
குறித்த கூட்டணிக்கான பொது கொள்கையை நிறுவுவதற்கான கட்சிகளின் முன்மொழிவுகள் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 26 குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக பெரமுன மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க