பிரித்தானியாவில் இருந்து மருத்துவ கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் (சி.இ.ஜே) தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மருத்துவ கழிவுகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதன் விளைவாக இலங்கையின் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த கழ்வுகளை இறக்குமதி செய்வதற்குப் பின்னால் இருந்து செயற்படும் நபர்களை அடையாளம் காண உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த கழிவுகளை நாட்டின் வேறொரு பகுதியில் கொட்டுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவையும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க