வடக்கு செய்திகள்

பரீட்சையில் சித்தியானவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சமூக பாதுகாப்பு சபையினுடைய மாவட்ட இணைப்பதிகாரி க சஞ்சீவன் தலைமையில் துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் தெரிவு செய்யப்பட்ட 3 மாணவர்களுக்கு சேமிப்பு தொகைக்கு ஏற்ற வகையில் 5000 ரூபா முதல் 50000 ரூபா வரையான பணப்பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது இந்த மாணவர்களை குறித்த திட்டத்தில் இணைத்த அதிகாரிகளும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி துணுக்காய் பிரதேச செயலக கணக்காளர் சமூகசேவைகள் உத்தியோகத்தர் அரச அதிகாரிகள் மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

குறித்த சமூக பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது வரையான பிள்ளைகள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை கிராம உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சமூகசேவைகள் உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக சமூக பாதுகாப்பு சபை உத்தியகத்தர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்து தெரிவிக்க