உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கோதுமை மா அதிக விலைக்கு விற்பனை – வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

வவுனியாவில் கோதுமை மா விலையை பழைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த மொத்த வியாபாரிகள், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மாவினை பிரிமா நிறுவனம் விலை அதிகரிப்புச் செயதுள்ளது.

இதையடுத்து வவுனியாலுள்ள கோதுமை மா மொத்த விற்பனை வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் சிலவற்றில் நேற்றும் இன்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகரித்த விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க வர்த்தக மானியில் புதிய விலை வெளிவரும் வரை, பழைய விலையில் கோதுமை மாவினை விற்பனை செய்யுமாறும் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மா மீது விதிக்கப்படும் வரிக்கமைய ஒரு கிலோ மாவின் விலை 8ரூபா ஜம்பது சதத்தினால் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரிமா நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க