எதிர்காலத்தில் மகா சங்கத்தினரை பாதிக்கும் வண்ணம் எவ்வித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார்.இந்த தகவல் நேற்று வெளியாகியுள்ளது.
வீதியில் இறங்கி போராடும் வீதியில் இறங்கி போராடும் பௌத்த பிக்குகள் தலைமைகளால் துஷ்பிரயோகம் செய்யப் படுகிறார்கள் என்ற கருத்தை ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிராக பௌத்த மதத் தலைவர்களும், அரசாங்கத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குற்றச்சாட்டை சுமத்தி வந்தார்கள்.
அந்த நிலையில் தனது கருத்தை குறித்த ஒரு இணையதளம் மாற்றி பிரசுரித்து இருக்கின்றது எனவேதான் அந்த அர்த்தத்தில் எவ்விதமான கருத்துக்களையும் கூறவில்லை என்ற மறுப்பை ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
மகா சங்கத்தினரை பாதிக்கும் வண்ணம் தாம் எதுவும் அந்த விடயத்தில் கூறவில்லை எனவும் அவர் கூறியிருக்கின்றார்.
இதனை தொடர்ந்து பிரதமர் இவரிடம் விளக்க கடிதம் ஒன்றை விளக்கம் கோரி கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ரணில் விக்கரமசிங்க அறிவுரை வழங்கி இருக்கின்றார் எதிர்காலத்தில் மகா சங்கத்தினரையும் மற்றும் யாரையும் புண்படுமாறு கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்ற கருத்தை அவர் வெளியிட்டிருக்கின்றார்.
கருத்து தெரிவிக்க