உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, சாட்சியங்களை பதிவு செய்து வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி தமது அறிக்கையை இறுதி செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கின்றார். எனினும் அவர் தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்ற செய்தியும் வெளியாகி இருக்கின்றது.
பெரும்பாலான சாட்சியங்கள் இந்த தெரிவுக்குழுவில் தற்போது பெறப்பட்டு இருக்கின்றன ஏற்கனவே இந்த குற்றச்சாட்டுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தெரிவுக் குழுவின் முன் தமது சாட்சியங்களை வழங்கினார்கள்.
அதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்வரும் தினங்களில் சாட்சியம் அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க போவதில்லை என்ற கருத்தை வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த நிலையிலேயே தெரிவுக் குழுவினரின் அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.
கருத்து தெரிவிக்க