விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் சில்பசேனா வேலைத்திட்டத்தின் முதலாவது கண்காட்சி கொழும்பில் நாளை இடம்பெறவுள்ளது.
விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் சில்பசேனா வேலைத்திட்டத்தின் முதலாவது கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இம் மாநாடு எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
வடிவமைப்பாளர்களினால் புதிதாக உருவாக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட நிர்மாணங்கள் இதன் போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.
தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை மக்கள் மத்தியில் சேர்ப்பதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க