வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவத்தில் நீர்வெட்டு எனப்படும் தீர்த்தோற்சவம் இன்று காலை இடம்பெற்றது.
கடந்த 3ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கதிர்காம கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இன்று நிறைவுக்குவந்துள்ளது.
இம்முறை கடந்த வருடங்களை விடவும் பெருந்திரளான பக்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் இன்று சிறப்பாக நிறைவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க