உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ருவான்வெல்ல பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டம்

கம்பெரலிய துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ருவான்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 344 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுள் 154 திட்டங்கள் ருவான்வெல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய திட்டங்கள் ருவான்வெல்ல பிரதேச செயலாளர் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுள் பெரும்பாலானவை வீதி அபிவிருத்தி திட்டங்களாகும்.

இத்திட்டங்களின் எண்ணிக்கை 241 ஆகும். இதற்கு மேலதிகமாக கால்வாய்களை சீர்செய்தல் பாடசாலைகளில் இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்தல்.

விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்தல், தேசிய நீர் விநியோக திட்டம் வீடமைப்பு, மின்சாரம், மத வழிபாட்டு தலங்கள், அபிவிருத்திக்கான திட்டங்கள் முதலான அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களுள் 145 திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக ருவான்வெல்ல பிரதேச சபை திட்ட உதவி பணிப்பாளர் டப்ள்யூ. சி ரணில் குமார தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க