பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுப் பெற்றுக்கொடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் விரைவாக பணிக்குத் திரும்புமாறும் தபால்துறை அமைச்சர் எம்.எச். ஏ.அப்துல் ஹலீம், தபால் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தபால் பரிவர்த்தனையின் ஊழியர்கள் நேற்று மாலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
48 மணி நேரம் தமது போராட்டம் தொடரும் என்று தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் ரவீந்திர பிரியசுந்தர தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு ஆகிய நடைமுறைகளில் காணப்படும் நெருக்கடிகள் இதற்கான காரணமாகும். ஆனால், நாட்டின் ஏனைய தபால் அலுவலகங்கள் வழமையான முறையில் இயங்கும் என அவர் கூறினார்.
இந்நிலையில், தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது கலந்துரையாடி தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் எம்.எச்.ஏ.அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க