அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் க்ளெமென்ட் நைலெட்சோசி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இவர் ஜூலை 18 முதல் 26 வரை இலங்கையில் தங்கி இருப்பார் என குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த ஒன்பது நாள் பயணத்தின் போது, நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கொழும்பு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த விஜயத்தின் போது இலங்கை அரச தரப்பு, நீதித்துறை, ஊடகங்கள், பொது அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் அதிகாரிகளையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட முக்கியமான சவால்களை நாடு எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இந்நிலையில் “எனது வருகை பொது சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்த உதவும் என்று நம்புகிறேன், என தனது வருகை தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க