ஓகஸ்ட் 31 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நாடு முழுவதும் ‘டெங்கு தடுப்பு மணித்தியாலத்தை ’ தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரசீலா சமரவீர இதனை தெரிவித்தார்.
டெங்கு பரவுவதைத் தடுக்கும் திட்டங்களில் ஒரு பகுதியாக இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
டெங்கு நோயிலானால் இதுவரை 40 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன, நாடு முழுவதும் சுமார் 28,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் அரசு நடத்தும் அமைப்புகளில் தூய்மைப்படுத்தும் திட்டங்கள் நடைபெறும். அத்துடன் பொது சுகாதார ஆய்வாளர் (PHI) உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்பார்கள் என வைத்தியர் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கொழும்பில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது.
கருத்து தெரிவிக்க