உள்நாட்டு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இஞ்சி உற்பத்தியை மேம்படுத்த செயலமர்வு

இலங்கையில் பச்சை இஞ்சி உற்பத்தியை முறையாக மேற்கொள்ளும் வகையில் உற்பத்தியாளர்களுக்கு செயலமர்வு ஒன்றை நடத்த ஏற்றுமதி விவசாயத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்டியிலுள்ள ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாத்தளை மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஹீன் விக்கிரமசிங்க இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளர்.

அதிலொரு கட்டமாக தம்புள்ளையில் பயிற்சி வகுப்பு  நடை பெற உள்ளது.

எதிர் வரும் 19ம் திகதி காலை 9.30 மணிக்கு தம்புல்லை, பொஹொருன்வெல சனசமூக நிலைய மண்டபத்தில் இது நடை பெற உள்ளது.

வருடந்தோரும் 25 ஆயிரம் மெற்றிக் தொன் இஞ்சி இலங்கையில் உற்பத்தியாவதாகவும் இது உள்ளுர் நுகர்வுக்குப் போதியதாக இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

அதே நேரம் இஞ்சி உற்பத்தியாகும் பருவகாலத்தில் இஞ்சியினது விலை பாரிய சரிவைக் காட்டுவது பருவமல்லாத காலத்தில் உயர்வைக்காட்டுவது உற்பத்தியாளருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

இதனை முறையாக முகாமை செய்தால் குறைந்த விலையைக் கொண்ட காலத்தில் இஞ்சி உற்பத்திகளை மேற்கொள்ளவும் ஏனைய காலங்களில் அதிக இலாபத்தை ஈட்டவும் முடியும்.

இதற்கு இஞ்சி உற்பத்திகளை பிரபல்யப் படுத்துவது ஒரு முக்கிய விடயமாக உள்ளது.

இதேவேளை மாத்தளை மாவட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் அதனுடன் அக்கறைகொண்டவர்களுக்கும்  மேற்படி செயலமர்வு நடத்தப்பட உள்ளது.

இதில் ஆர்வமுள்ளவர்கள் 066 -22 43 451 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

மேலதிக விபரங்களுக்கு தகவல் தொடர்பாடல் பிரிவுக்கு 071 8168346 (நிசாந்தி கொடிதுவக்கு) தொடர்பு கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க