சினிமா

கதை, திரைக்கதை, வசனம் எழுதும் அகில உலக சூப்பர் ஸ்டார்.

இயக்குனர் எஸ். அமுதன் இயக்கிய தமிழ்ப்படம் – 2 வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து விளையாட்டு சம்பந்தமான திரைப்படம் ஒன்றில் மிர்ச்சி சிவா நடித்து வருகிறார். இப்படத்தை பிப்ரவரி 14 திரைப்படத்தை இயக்கிய எஸ். பி. ஹொசிமன் இயக்கி வருவதாகவும், இப்படத்திற்கு “சுமோ” என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டிருந்தாலும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. சுமோவில்,  சிவாவுடன் பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு நிவாஸ். கே. பிரசன்னா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமாக சிவா ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி கதை, திரைக்கதை, வசனம் என இப்படத்தில் தன்னை புதிய பரிமாணங்களில் ஜொலிக்கச் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க