உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ரணில், மஹிந்த, மைத்ரியால் சிறப்பான ஆட்சியை தரமுடியாது.

ரணில், மஹிந்த அல்லது மைத்ரி யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் சிறப்பான ஆட்சி ஒன்றை நடத்திச்செல்ல முடியாது.

மாறாக புதிய தோற்றம் கொண்டு அணி ஒன்றினால் மாத்திரமே நாட்டை அபிவிருத்திப் பாதையில் நடத்திச்செல்ல முடியும் என்று ஜேவிபி கூறுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா யோசனை, அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது என்று செய்தியை அவர் மறுத்துரைத்துள்ளார்.

தோல்விக்காணும் அரசாங்கத்துக்கு மக்களுக்கான வாக்குறுதிகளை மீறுகின்ற அரசாங்கத்துக்கு எதிராகவே நம்பிக்கையில்லா யோசனை கொண்டு வரப்பட்டது என்று நளிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிராக 2003ஆம் ஆண்டு ஜேவிபி மேற்கொண்ட பேரணியின் பின்னர் மூன்று மாதங்களுக்குள் அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க