உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

காட்டு யானைத் தாக்கியதில் இரு மாணவிகள் காயம்

மட்டக்களப்பு தும்பங்கேணி கிராத்தினுள் புகுந்த காட்டுயானை ஒன்று இரு மாணவிகளை தாக்கியதில் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த தாக்குதலில் 8 மற்றும் 14 வயதுடைய இரு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 வயதுடைய சந்திரகுமார் கிசாணி எனும் மாணவி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிக்கிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்ற மாணவி சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளாதாக அப்பகுதி அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகாலையில் கிராமத்தினுள் புகுந்த காட்டுயானையை கிராமத்தைவிட்டு வெளியேற்றமுடியாமல் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர். பின்னர் கிராமத்திலுள்ளவர்கள், கிராமத் தலைவர்கள், உள்ளிட்டோர் ஒன்றுகூடி தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு மற்றும் யானைவெடி கொழுத்தியும் யானையை வெளியேற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த யானை அக்கிராமத்திலுள்ள தோடத்தினுள் புகுந்து அங்கிருந்த பயன்தரும் தென்னை, வாழை மரவள்ளி உள்ளிட்ட பல பயன்தரும் பயிரினங்களை அழித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சம்மந்தமப்பட்ட அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் காலத்திற்குக் காலம் அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை திருப்தியளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க