மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப்பணிகள் டிசம்பர் மாதத்தினுள் நிறைவுசெய்யப்படும் என நகர திட்டமிடல் அதிகார சபையின் திட்ட பணிப்பாளர் ஜெமுனு பிரேம ரட்ண தெரிவித்தார்.
மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகர சபை, நகர திட்டமிடல் அதிகார சபை(யூ.டி.ஏ) மற்றும் மன்னார் மாவட்ட பொறியியலாளர் சங்கம் ஆகியவற்றிற்கு இடையில் இன்று விசேட சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், குறித்த விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளில் பாரிய குறைபாடுகள் காணப்பட்டது.
இதனை நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதி நிதிகளுக்கு அறிவித்தோம் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உரிய அதிகாரிகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த திட்டம் டிசம்பருக்குள் மன்னார் நகர சபையிடம் ஒப்படைக்கப்படும் என பணிப்பாளர் ஜெமுனு பிரேம ரட்ண தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க