எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் ஒருவரை போட்டியிட வைக்க முயற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
எந்த ஒரு முஸ்லிம் கட்சியையும் சாராதவரை முஸ்லிம் வேட்பாளராக முன்னிறுத்த முனைப்பு காட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முஸ்லிம்களின் தனித்துவ வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.
எனினும் இது தொடர்பில் முன்னின்று செயற்படுவர்கள் யார் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இவ்வாறான செயற்பாட்டிற்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவார்கள் எனில் இதனை ஆதரிக்க தாம் தயாராக இருப்பதாக முஸ்லிம் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கருத்து தெரிவிக்க