உள்நாட்டு செய்திகள்புதியவை

இணைய வழி குற்றம் புரிந்த இலங்கையர் பிலிப்பைன்ஸில் கைது

தனது பிலிப்பைன்ஸ் மனைவியை இணையவழி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய (சைபர்செக்ஸ்) இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸின் தேசிய புலனாய்வுப் பிரிவின் (என்.பி.ஐ) செயற்பாட்டாளர்களால் கைது செய்யப்பட்டார்.

பிலிப்பைன்ஸின் சான் ஜோஸ் டெல் மன்டேயில் உள்ள அவரது வீட்டில் குறித்த நபர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார் என ‘ஜிஎம்ஏ 24 ‘ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏழு மாதங்களாக, குறித்த நபர் தம்மை இணையத்தின் ஊடாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் இது இலங்கையின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் பார்க்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

தனது மகளையும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்றதை அடுத்து பிலிப்பைனின் தேசிய புலனாய்வுப் பிரிவின் உதவியை பாதிக்கப்பட்ட பெண் நாடியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர் ‘2003 ஆம் ஆண்டின் ஆர்.ஏ 9208 அல்லது ‘நபர்கள் கடத்தல் தடுப்புச் சட்டம்’, ஆர்.ஏ 9262 அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்புச் சட்டம் மற்றும் ‘2012 சைபர் குற்ற தடுப்புச் சட்டம் ‘ ஆகிய குற்றங்களுக்கு கீழ் விசாரிக்கப்படுவார் என அந்நாட்டு புலனாய்வு பிரிவு தலைவர் ரொனால்ட் அகுல்டோ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க