உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ரவி, மங்களவுக்கிடையில் கடும் மோதல்!

அமைச்சர்களான மங்கள சமரவீரவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்குமிடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.

மின்வலு, எரிசக்தி அமைச்சின் செயற்றிட்டங்களுக்கான நிதியை ஒதுக்குவதில் நிதி அமைச்சு இழுத்தடிப்பு செய்துவருவதாக ரவி தரப்பிலிருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அண்மையில் ரவி கருணாநாயக்கவினால் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கையொன்றை மங்கள சமரவீர நிராகரித்துவிட்டார் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே களமிறங்க வேண்டும் என மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுவருகின்றார்.

சஜித் பிரேமதாசவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ரவி கருணாநாயக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாகவே சஜித்தை முன்னிலைப்படுத்தும் செயலில் மங்கள இறங்கியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

கருத்து தெரிவிக்க