‘அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ எனும் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இரண்டு கட்டிடங்களுக்கான திறப்பு விழா நிகழ்வானது இன்று மதியம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்-ஆண்டாங்குளம் பாடசாலையில் இடம் பெற்றது.
ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையம் மற்றும் இடை நிலை விஞ்ஞானம் ஆய்வு கூடம் ஆகியவை வைபவ ரீதியில் திறந்து வைக்கும் நிகழ்வு குறித்த பாடசாலை அதிபர் திரு.பு.அந்தோனிப்பிள்ளை தலைமையில் இடம் பெற்றது.
யுத்ததால் நேரடியாக பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலையின் கட்டிடங்கள் அனைத்தும் சேதம் அடைந்த நிலையில் கல்வி அமைச்சின் பங்களிப்பில் குறித்த பாடசாலைக்கான கட்டிடங்கள் 2016 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு அமைக்கப்பட்டு இன்று மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண பொறியியலாளர், மடு உதவி கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் , நிர்வாக உத்தியோகஸ்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க